News October 5, 2024
கருக்கா குறிச்சியில் தங்க நாணயங்கள்

ஆலங்குடி அருகே கருக்கா குறிச்சியில் நமது பகுதி வணிகர்கள் சங்க காலத்தில் ரோமநாடு வணிகர்களுடன் வணிக தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கு ஆதாரமாக ரோமன் நாட்டு பொன் நாணயங்கள் கருக்கா குறிச்சியில் கண்டெடுக்கப்பட்டு புதுகை அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளன. பல்லவர் பாண்டியர் சோழர் விஜயநகர மன்னர்கள், தொண்டமான் மன்னர்களும் இப்பகுதியை ஆண்டுள்ளனர். இவர்களின் வரலாறு கல்வெட்டுகளில் கிடைத்துள்ளது.
Similar News
News November 7, 2025
விராலிமலை: மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

விராலிமலை கார்கில் நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(36). இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
News November 7, 2025
புதுக்கோட்டை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
3.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
புதுகை: நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுகைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கிற்கு அனுப்பபடுகிறது.


