News March 16, 2024

அரசியல் கட்சி விளம்பரங்கள் அதிரடியாக அகற்றம்

image

நாடாளுமன்ற தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள் பொது இடங்களில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகள் முன்னிலையில் அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் சார்ந்த சுவரொட்டிகள் சுவர் விளம்பரங்களை அனைத்து இடங்களிலும் அகற்றும் பணி தீவிரமாக நடக்கிறது.

Similar News

News November 13, 2025

மதுரை: 12th முடித்தால் கிராம வங்கியில் சூப்பர் வேலை

image

மதுரை மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில் (NABFINS) காலியாக உள்ள பல்வேறு Customer Service Officer பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 12 – 33 வயதுகுட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ. 15க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வு இல்லை. இந்த பயனுள்ள தகவலை ஷேர் செய்யுங்க.

News November 13, 2025

மேலூர்: இளைஞர் கொலை வழக்கில் நண்பர்கள் மூவர் கைது

image

மேலூர் செக்கடிபஜார் பகுதியில் கடந்த 9ஆம் தேதி மணிமாறன் என்ற இளைஞர் தலையில் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக மேலூர் டிஎஸ்பி சிவகுமார் இன்ஸ்பெக்டர் சிவசக்தி ஆகியோர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இது தொடர்பாக மணிமாறனின் நண்பர்களான ராஜேஷ், ரமேஷ், மற்றும் முகமதுயாசின் ஆகியோரை கைது செய்தனர்.

News November 13, 2025

மேலமடை சந்திப்பு பாலத்தை டிச.7ல் திறக்கிறார் முதல்வர்

image

மதுரை மேலமடை, கோரிப்பாளையம் சந்திப்புகளில் மேம்பாலப் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் கலெக்டர் பிரவீன்குமார், தளபதி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தனர். மேம்பாலங்கள் கட்ட முறையே ரூ.150 கோடி, ரூ.190 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலமடை சந்திப்பு மேம்பாலத்தை டிச.7ல் முதல்வர் திறக்கிறார். தற்போது பாலப் பணிகள் 97 சதவீதம் முடிந்துள்ளதாக தெரிவித்தனர்.

error: Content is protected !!