News March 16, 2024

பெரம்பலூர்: பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

image

பெரம்பலூர் ஸ்ரீ மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீமதனகோபாலசாமி திருக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா இன்று மங்கள வாத்தியம் முழங்க, பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தநிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் கோவிந்தராஜ், முன்னாள் அறங்காவலர்கள் வைத்தீஸ்வரன் உட்பட பலர் செய்திருந்தனர்.

Similar News

News December 11, 2025

பெரம்பலூர்: வீட்டில் இருந்தே ஆதார் திருத்தம் செய்யலாம்!

image

பெரம்பலூர் மக்களே, ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. <>இங்கே கிளிக்<<>> செய்து, எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

News December 11, 2025

பெரம்பலூர்: சூப்பர் மார்க்கெட்டில் கொள்ளை

image

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயராஜ் என்பவர் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சூப்பர் மார்க்கெட் மேற்கூரையை உடைத்து மர்ம நபர்கள் ரூ,4.50 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி காசுகளை கொள்ளையடித்து சென்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த திருட்டு சம்பத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

News December 11, 2025

பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மின்தடை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை (டிச.12) போரளி, மங்கூன், கைகளத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் இருத்து மின் விநியோகம் பெரும் பகுதிகளான போரளி, கல்பாடி, அசூர், கே.புதூர், அடைக்கப்பம்பட்டி, மேலைப்புலியூர், அம்மாபாளையம், அய்யனார்பாளையம், நுத்தப்பூர். நெற்குன்றம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை விநியோகம் இருக்காது.

error: Content is protected !!