News March 16, 2024
அரசியல் கட்சியினரின் சுவரில் வரையப்பட்ட சின்னங்கள் அழிப்பு

தமிழகத்தில் வரும் ஏப்.19ஆம் தேதி மக்களவை தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்பட உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வரும் மார்ச்.20 ஆம் தேதி துவங்குகிறது. இதனையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. கோவையில் பொது இடங்களில் உள்ள தலைவர்களின் சிலைகள், அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் உடனடியாக அழிக்கப்பட்டு வருகின்றன.
Similar News
News November 5, 2025
அறிவித்தார் கோவை கலெக்டர்

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (TN-TET) இலவச இணையவழி பயிற்சி வகுப்புகள் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் நவம்பர் 5 முதல் தொடங்குகிறது. இத்தேர்வில் பங்கேற்போர் https://forms.gle/d2MbqVVtgGeKY9ra6 என்ற இணைப்பில் பதிவு செய்யலாம். விபரங்களுக்கு 0422-2642388 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (04.11.25) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
கோவையில் இலவச லாரி ஓட்டுநர் பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Commercial Vehicle Driver Level – IV பயிற்சி வரும் 19ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. 65 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், லாரி, சரக்கு வாகனம், ஓட்டும் பயிற்சி, லாரி பாராமரிப்பு போன்ற அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு 8ம் வகுப்பு முடித்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க <


