News October 4, 2024
ஹிஸ்புல்லா தலைவர் நசருல்லா கொல்லப்பட்ட ரகசியம்

ரகசியமாக இயங்கிவந்த ஹிஸ்புல்லா தலைவர் நசருல்லா, இஸ்ரேலின் தாக்குதலில் பலியானார். இதுபற்றி லெபனான் வெளியுறவு அமைச்சர் அப்தல்லா ரஷித் ஹபிப் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். நசருல்லா கொல்லப்படும் முன், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டு, அது அமெரிக்காவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்பின் நசருல்லா வெளியே வர, சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல், நசருல்லாவை கொன்றுவிட்டதாக கூறப்படுகிறது.
Similar News
News August 28, 2025
விஜய்யை கண்டுகொள்ளாத VIP.. கூட்டணிக்கு GATE-ஆ?

கூட்டணிக்காக, விஜய் தனது பார்வையை காங்., பக்கம் திருப்பியிருப்பதாக பேசப்பட்டது. இதற்கு தோதாக, தவெகவுடன் கூட்டணி வைத்தால் 70 சீட்கள் வரை கிடைக்கும் என காங்., VIP-கள் சிலர் கணக்கு போட, இதனை பிடித்துக்கொண்ட பனையூர் வட்டாரம் விஜய்யை ராகுலுடன் சந்திக்க வைக்க அப்பாயின்மென்ட் கேட்டு வருகின்றனராம். ஆனால் ஸ்டாலினுடன் ராகுலின் உறவு பலமாக இருப்பதால் விஜயை அவர் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது.
News August 28, 2025
குழந்தைகள் கூட மோடியை பற்றி சொல்கின்றனர்: ராகுல்

BJP, RSS இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டு எப்படி வெற்றி பெற்றன என்பதை விரைவில் நிரூபிப்போம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்கு திருட்டை கண்டித்து பிஹாரில் இன்று நடைபெற்ற யாத்திரையில் பேசிய அவர், PM மோடி வாக்குகளை திருடுகிறார் என சிறு குழந்தைகள் தன் காதில் கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லோக் சபா, ஹரியானா தேர்தல்களில் நடைபெற்ற வாக்கு திருட்டின் ஆதாரத்தை கொடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
News August 28, 2025
நடிகர் அஜித் எடுக்கப்போகும் புது அவதாரம்?

FANBOY அடைமொழியோடு தங்களது புகழ்பாடிகளையே பெரும்பாலான ஹீரோஸ் டைரக்டர்களாக நியமித்து வருகின்றனர். GBU படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும், தன்னுடைய அடுத்த பட டைரக்டர் ஆதிக் தான் என அஜித் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், இந்த கூட்டணிக்கு தயாரிப்பாளர்தான் கிடைக்கவில்லை. நான்கைந்து கம்பெனிகள் இந்த கூட்டணியை நிராகரித்துவிட்டதால், Production House ஆரம்பிக்க அஜித் யோசிப்பதாக கூறப்படுகிறது.