News March 16, 2024
தென்காசி கலெக்டர் அறிவிப்பு

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,நடைபெறவுள்ள நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் படைக்கலன் (துப்பாக்கி) உரிமம் பெற்ற அனைத்து உரிமதாரர்களும் , தங்கள் வசம் வைத்துள்ள உரிமம் பெற்ற படைக்கலனை (துப்பாக்கியை) அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலரிடம் தவறாமல் உடனடியாக ஒப்படைக்குமாறு தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News April 21, 2025
தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட விவரம்

தென்காசி, கடையம் மேற்கு தொடர்ச்சி மலையில் 84 அடி முழு கொள்ளளவு கொண்ட ராமநதி அணை நீர்மட்டம் 53.25 அடி. 85 அடி முழு கொள்ளளவு கொண்ட கடனா அணை நீர்மட்டம் 51.20 அடி, 72 அடி முழு கொள்ளளவு கொண்ட கருப்பா நதி அணையின் நீர்மட்டம் 25.92 அடி. 36 அடி கொள்ளளவு கொண்ட குண்டார் அணையின் நீர்மட்டம் 25 அடி, 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 30.25 அடி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News April 21, 2025
தென்காசி மாவட்ட வட்டாட்சியர் அலுவலக எண்கள்!

▶️திருவேங்கடம் வட்டாட்சியர் 04636-264400
▶️சங்கரன்கோவில் வட்டாட்சியர் 04636-222270
▶️சிவகிரி வட்டாட்சியர் 04636-250223
▶️ஆலங்குளம் வட்டாட்சியர் 04633-270899
▶️வீரகேரளம்புதூா் வட்டாட்சியர் 04633-277140
▶️ கடையநல்லூா் வட்டாட்சியர் 04633-245666
▶️ செங்கோட்டை வட்டாட்சியர் 04633-233276
▶️ தென்காசி வட்டாட்சியர் 04633-222262
உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க.
News April 21, 2025
டிராக்டரிலிருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த தம்பதி முனியாண்டி – பெரியநாயகி (48). இவா்கள் ஜெயபால் என்பவருடன் சோ்ந்து தென்காசி மாவட்டம் ராயகிரியில் கரும்பு அரைவை ஆலை நடத்தி வருகின்றனா். இத்தம்பதி டிராக்டரில் கரும்பு ஏற்றுவதற்காக சென்றனர். அப்போது வேகத்தடையில் டிராக்டா் ஏறி இறங்கியபோது, பெரியநாயகி தவறி கீழே விழுந்து காயமடைந்தார். அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.