News March 16, 2024
ஓபிஎஸ் தரப்புக்கு மீண்டும் பின்னடைவு

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக்கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தை அணுகும்படியும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஓபிஎஸ் தரப்புக்கு பின்னடைவாகும்.
Similar News
News April 30, 2025
அயோத்தி ராமர் கோயில் கட்டி முடிப்பது எப்போது?

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் வரும் ஜூன் 5-க்குள் முடிவடையும் என ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. தற்போது 99% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ராமர் தர்பார் அமைக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், கோயில் வளாகத்தில் உள்ள வால்மீகி, அகத்திய முனி ஆகியோரின் கோயில்களையும் ஜூன் 5-க்கு பிறகு பொதுமக்கள் தரிசிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 30, 2025
தோனியின் ரெக்கார்டை முந்திய பாப் டூ பிளெஸ்ஸிஸ்!

IPL-ல் அதிக வயதில் அரைசதம் அடித்த 3-வது வீரர் என்ற பெருமையை DC வீரர் பாப் டூ பிளெஸ்ஸிஸ் பெற்றுள்ளார். KKR-க்கு எதிரான மேட்சில், 62 ரன்களை விளாசி தோனியை அவர் முந்தினார். தோனி 40 வயது 262 நாள்களில் அரைசதம் அடித்த நிலையில், டூ பிளெஸ்ஸிஸ் 40 வயது 290 நாள்களில் அரைசதம் அடித்தார். இப்பட்டியலில் கில்கிறிஸ்ட் (41 வயது 181 நாள்கள்) முதல் இடத்திலும், கெயில் (41 வயது 39 நாள்கள்) 2-வது இடத்திலும் உள்ளனர்.
News April 30, 2025
இன்று தங்கம் வாங்க முடியாதவங்க இத பண்ணுங்க!

அட்சய திருதியை நாளில் தங்கம் மட்டுமல்ல, எந்த பொருளை வாங்கினாலும், மங்களம் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதே போல, நீங்கள் செய்ய விரும்பும் ஒரு காரியத்தையும் இன்று தொடங்கினால், அது வெற்றியில் முடியும் எனப்படுகிறது.
அரை கிலோ அரிசியை வாங்கி சிலருக்கு தானமாக வழங்கலாம். ஒரு வேளை உணவாவது மற்றவர்களுக்கு வாங்கி தரலாம். இதன்மூலம் நல்ல வளர்ச்சியும், மகாலட்சுமி அருளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.