News March 16, 2024

குன்னூர் : வாலிபர் சடலம் மீட்பு

image

குன்னூர் அருகே கோட்டக்கல் செங்குன்ராயர் வனப்பகுதிக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலா  சென்றனர். ஒரு இடத்தில் தேனீக்கள் துரத்தியபோது எல்லோரும் ஓடி பாதுகாப்பான இடத்திற்கு சென்றனர். அப்போது  ஒருவர் மாயமானதால்  போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் இன்று (16/03/24) காலை மாயமான வாலிபரை ட்ரோன் கேமரா மூலம் தேடி கண்டுபிடித்து சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் சடலமாக மீட்டனர்.

Similar News

News September 22, 2025

நீலகிரியில் நாளை ஸ்டாலின் முகாம் விபரம்!

image

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் ஊட்டி நகராட்சி லவ் டேல் லீனா தொடக்கப்பள்ளி மைதானத்திலும், கூடலூர் நகராட்சி ஜானகி அம்மாள் திருமண மண்டபத்திலும், நெல்லிகால நகராட்சி பகுதிகளுக்கு ஹோலி கிராஸ் கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியிலும், ஸ்ரீ மதுரை ஊராட்சி பகுதிகளுக்கு மண்வயல் சமுதாய கூடத்திலும், கடநாடு ஊராட்சி பகுதிகளுக்கு கடநாடு சமுதாய கூட்டத்திலும் நடைபெறுகிறது.

News September 22, 2025

நீலகிரியில் மது அருந்த தடை தீர்மானம் நிறைவேற்றம்!

image

நீலகிரி மாவட்டத்தில் சுண்டட்டி கொட்டனல்லி மற்றும் சுற்றுலா பகுதிகளில் கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டனர். அந்த ஆலோசனை கூட்டத்தில் சுப-துக்க நிகழ்ச்சிகளில் மது வழங்கக் கூடாது. மேலும் மது வழங்குவோர் சுப நிகழ்ச்சிகளுக்கு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளக் கூடாது. ஆரோக்கியமான ஒரு சமுதாயத்தை உருவாக்க வழிவகுப்பு வேண்டும் என கலந்துரையாடப்பட்டது.

News September 22, 2025

நீலகிரி: கிராம வங்கி வேலை.. கடைசி வாய்ப்பு!

image

நீலகிரி மக்களே, இந்திய வங்கிப் பணியாளர் தேர்வாணையம், காலியாக உள்ள கிராம வங்கி உதவியாளர் பணிக்காக வரும் செப்.28 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. இதற்கு மாதம் ரூ.35,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> பண்ணுங்க. இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!