News October 4, 2024
திருச்சி அருகே கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்

மணப்பாறை அடுத்த தொப்பம்பட்டியை சேர்ந்த சரவணன் கடந்த இரு தினங்களாக காணவில்லை. இது குறித்து மணப்பாறை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கிணற்றில் சரவணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையறிந்த மணப்பாறை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News August 20, 2025
திருச்சி: அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு பரிசு அறிவிப்பு

மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநிலத்தில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.2.50 லட்சம், 2-ம் பரிசாக ரூ.1.50 லட்சம், 3-ம் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த விவசாயிகள் பயன்பெற, நிலத்தின் ஆவணங்களுடன் வேளாண்மை உதவி இயக்குனரை நேரில் அணுகி விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
திருச்சி – ராமேஸ்வரம் ரயில் மூன்று நாட்கள் ரத்து

திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் மூன்று தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “திருச்சி – ராமேஸ்வரம் விரைவு ரயில் வரும் 25, 26, 28 ஆகிய தினங்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் திருச்சியில் இருந்து மானாமதுரை வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 20, 2025
திருச்சி: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

திருச்சி மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <