News March 16, 2024

தேர்தல் குறித்த அவசர ஆலோசனை

image

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான சங்கீதா தலைமையில் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

Similar News

News October 27, 2025

மதுரை: உளவுத் துறையில் ரூ.1,42,400 சம்பளத்தில் வேலை

image

உளவுத்துறையில் காலியாக உள்ள Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியின் வகை: மத்திய அரசு வேலை
பணியிடங்கள்: 258
1. வயது: 18-27 (SC/ST-32,OBC-30)
2. சம்பளம்: ரூ.44,900 –ரூ.1,42,400
3. கல்வித் தகுதி: Engineering (ECE,IT,CS)
4. கடைசி தேதி: 16.11.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK<<>> HERE .
6. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.

News October 27, 2025

மதுரையின் புதிய மேயர் இவரா..?

image

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு புகாரில் இந்திராணி, மேயர் பதவியை இழந்தார். புதிய மேயருக்கு கட்சியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், மாவட்ட செயலாளர் தளபதி ஆகியோரின் சிபாரிசுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முன்னாள் மண்டல தலைவர்கள் வாசுகி, சரவணபுவனேஸ்வரி, கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திராகாந்தி பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

News October 27, 2025

மதுரையில் முன்விரோதத்தில் ஒருவர் கொலை

image

மதுரை புதுவிளாங்குடி யுவராஜ், 24. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஷியாம்குமார், சபா ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. யுவராஜ், அக்., 19 இரவு, நண்பர் சித்தனுடன் 19, வீட்டின் முன் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது ஷியாம்குமார், சபா உட்பட 6 பேர், வாள் உள்ளிட்ட ஆயுதங்களால் யுவராஜை வெட்டினர். மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில், சித்தன் நேற்று இறந்தார்.4 பேரை கூடல்புதுார் போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!