News March 16, 2024
ஆந்திர சட்டசபைக்கு மே 13ல் தேர்தல்

ஆந்திரா சட்டசபைக்கு மே 13ல் தேர்தல் நடைபெறுகிறது. 175 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 18ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 25ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீது ஏப்ரல் 26ஆம் தேதி பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்ப பெற ஏப்ரல் 29ஆம் தேதி கடைசி நாளாகும். இதையடுத்து மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெறும். அதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ல் எண்ணப்படும்.
Similar News
News November 3, 2025
உலகின் மிகவும் குளிர்ச்சியான நாடுகள்

சில நாடுகளில் கடும் குளிரால், பனி மூடிய மலைகள், உறைந்த நதிகள் மற்றும் பனிச்சாரல் நிறைந்த காற்று இருக்கும். குளிர்காலங்களில் வெப்பநிலை மைனஸ் அளவிற்கும் குறைந்து காணப்படும். இது, சிலருக்கு சவாலாகவும், சிலருக்கு ரசனையாகவும் இருக்கும். எந்தெந்த நாடுகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக பாருங்க. இதில், உங்களுக்கு பிடித்த நாடு எது? கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: விஜய்

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 35 மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மீனவர்கள் கைது வேதனை அளிப்பதாக கூறிய அவர், மத்திய அரசு தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசுக்கு, உரிய அழுத்தத்தை தமிழக அரசு உண்மையாக கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
News November 3, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… அறிவிப்பு

ஊரக பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும். www.dge.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்ய வேண்டும். அதனை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, பள்ளி HM-களிடம் ஒப்படைக்குமாறு மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


