News October 4, 2024

விராட் கோலியை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு

image

பாரா ஒலிம்பிக்கில் தொடர்ந்து 3 முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலியை சந்தித்துள்ளார். 17ஆவது பாரா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்ற அவருக்கு கோலி வாழ்த்து கூறியுள்ளார் . இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரியப்பன் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் டி63 பிரிவில் 1.85 மீ., உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 16, 2025

EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

image

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

32 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

News August 16, 2025

திமுகவுக்கு தோல்வி பயம்: கே.பி.ராமலிங்கம்

image

தோல்வி பயத்தால் திமுக அரசு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் விமர்சித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு செய்யாதவற்றை, மீதமுள்ள சில மாதங்களில் செய்வதாக வெளி வேஷம் போட்டு வருகிறார் என சாடிய அவர், தமிழகத்தின் தீய ஆட்சியான திமுக ஆட்சியை அகற்றுவதை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். 2026-ல் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்டுவார்கள் என எச்சரித்தார்.

error: Content is protected !!