News October 4, 2024

பூஜையுடன் தொடங்கிய ‘தளபதி 69’

image

H.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படமான ‘தளபதி 69’ படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. அதில் நடிகர்கள் விஜய், பாபி தியோல், நடிகைகள் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, இயக்குநர் வினோத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. நாளை இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், மற்ற நடிகர்கள் விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

Similar News

News August 16, 2025

கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரம் எது?

image

இன்று கிருஷ்ணரின் பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் விரதமிருந்து நாள் முழுவதும் கிருஷ்ணரை வழிபடுவார்கள். பஞ்சாங்க கணிப்பின் படி, ஆகஸ்ட் 16 அதிகாலை 1:41 முதல் இரவு 11:13 வரை அஷ்டமி திதி நீடிக்கிறது. சனிக்கிழமை என்பதால் காலை 10:30 முதல் 11:50 வரை கிருஷ்ணரை வழிபட சிறந்த நேரமாக குறிப்பிடப்படுகிறது. மேலும், மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் பூஜைகளை செய்து வழிபடவும் உகந்த நேரமாகும்.

News August 16, 2025

EPS-க்கு எதிராக அணிதிரளும் அதிமுக சீனியர்கள்

image

அன்வர் ராஜா, மைத்ரேயன் அதிமுகவில் இருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்தனர். இது அதிமுகவினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் செங்கோட்டையன், தம்பிதுரை, செல்லூர் ராஜு என பல மூத்த தலைவர்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இபிஎஸ் உரிய மரியாதை அளிக்காததே அவர்களது புகாராக உள்ளதாகவும், விரைவில் அவர்கள் இபிஎஸ்-க்கு எதிராக திரும்ப வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

News August 16, 2025

32 மாவட்டங்களுக்கு மழை அலர்ட்

image

அடுத்த 2 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) 32 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கப்போவதாக IMD எச்சரித்துள்ளது. காஞ்சி, கடலூர், செங்கல்பட்டு, தி.மலை, விழுப்புரம், சேலம், அரியலூர், திருச்சி, தஞ்சை, நாகை, கோவை, தென்காசி உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

error: Content is protected !!