News March 16, 2024

செங்கல்பட்டு: அடையாளம் தெரியாத வாகன மோதி மான் பலி

image

செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூரில் இருந்து கூவத்தூர் செல்லும் சாலையில் தட்டம்பட்டு கிராமம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் உயிரிழந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மானை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

Similar News

News January 10, 2026

தாம்பரம்: 3 பேர் அதிரடி கைது!

image

வண்டலூர் – மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா மற்றும் ஹெராயின் கடத்திய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சரோஜ் குமார் (51), சகஜான் (31), ரகுமான் (38) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 25 கிலோ கஞ்சா மற்றும் 5 கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து போதைப்பொருட்களைக் கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

News January 10, 2026

கிளம்பாக்கத்தில் பரபரப்பு!

image

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஊரப்பாக்கம் சிக்னலில் இன்று அதிகாலை 2 மணியளவில் பெரும் விபத்து நிகழ்ந்தது. முன்னால் சென்ற வாகனம் திடீரென நின்றதால், பின்னால் வந்த பாரம் ஏற்றிய லாரி பிரேக் பிடித்தது. அப்போது லாரியிலிருந்த இரும்பு கம்பிகள் சரிந்து, அருகில் வந்த கார் மீது விழுந்தன. உயிர் சேதம் ஏற்படவில்லை இருந்த போதும் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News January 10, 2026

செங்கல்பட்டில் துடிதுடித்து பலி!

image

சிங்கபெருமாள் கோவில் அடுத்த திருத்தேரி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி உண்ணாமலை (55) மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை விரக்தியில் உண்ணாமலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிங்கபெருமாள் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!