News March 16, 2024
மேம்படுத்தப்பட்ட குடிநீர் திட்டம் திறப்பு விழா

முதலியார் பேட்டை தொகுதி வேல்ராம்பட்டு இன்ஜினியர்ஸ் காலனி பகுதியில் கட்டப்பட்டுள்ள 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர் தேக்க தொட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கான
மேம்படுத்தப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கான திறப்பு விழா சட்டமன்ற உறுப்பினர் சம்பத் தலைமையில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு நீர் தேக்க தொட்டியினை திறந்து வைத்தார்.
Similar News
News April 7, 2025
காரை: கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம்

காரைக்கால் தனியார் கப்பல் துறைமுகத்தில் தேசிய கடல்சார் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. கலெக்டர் சோம சேகர் அப்பாராவ் தலைமை தாங்கினார். துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி சச்சின் ஸ்ரீவஸ்தவா முன்னிலை வகித்தார். இதில், கடல்சார் துறையின் முக்கிய அம்சங்களை வலியுறுத்தி, துறைமுகத்தின் தலைமை இயக்க அதிகாரி தலைமை நிர்வாக அதிகாரிகளின் உரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் இடம்பெற்றன.
News April 7, 2025
புதுச்சேரியில் பிரபல குற்றவாளி அதிரடி கைது

கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற ஸ்டிக்கர் மணி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து வெளியே வந்தார். இவர் நீதிமன்ற உத்தரவுப்படி காரைக்காலில் கையெழுத்திட வேண்டும். ஆனால் கையெழுத்து இட செல்லாமல் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட திட்டமிட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அறிந்த ஓதியஞ்சாலை போலீசார் ஸ்டிக்கர் மணியை மீண்டும் கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
News April 6, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி நாரா சைதன்யா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “போலியான உடனடி கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மிரட்டி பணம் பறிப்பார்கள். ஆகையால் உடனடிக் கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம். வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சமூக வலைதள குழுக்களில் தெரியாத நபர்கள் கூறும் ஆன்லைன் டிரேடிங்கை நம்ப வேண்டாம்” என்றார்