News March 16, 2024
புதுச்சேரி முன்னாள் முதல்வர் பாஜக மீது பகிரங்க குற்றச்சாட்டு

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தனது வீட்டில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது, பாராளுமன்ற சீட்டை ரூ.50 கோடிக்கு பேரம் பேசி விற்க முயற்சிக்கின்றனர். ஒரு அமைச்சர் தொடர்ந்து பல முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி அவர் வெளிநாடு சென்று வருவது குறித்து உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
Similar News
News August 15, 2025
நவோதயா வித்யாலயா பள்ளி சேர்க்கை காலக்கெடு நீட்டிப்பு

காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா முதல்வர் கண்ணதாசன் நேற்று விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “வரும் 2026-27ம் கல்வியாண்டில் ஜவகர் நவோதயா வித்யாலயாவில் 6ம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கால வரம்பு, வரும் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்வாளர்கள் www.navodaya.gov.in அல்லது https:// cbseitems.rcil.gov.in/nvs என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.” என கூறியுள்ளார்.
News August 15, 2025
ஆசைவார்த்தை கூறி புதுச்சேரியில் பல கோடி ரூபாய் மோசடி

மல்டி லெவல் மார்க்கெட்டிங் அடிப்படையில், செல்போன் செயலியில் முதலீடு செய்தால் 30 நாளில் இரட்டிப்பு பணம் தருவதாக, சமூக வலைதளத்தில் தகவல் வைரலானதை நம்பி, புதுச்சேரி மற்றும் தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த பலர், மர்ம நபர்கள் அனுப்பிய லிங்க்கில் இணைந்து கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர். இதில் ஏமாந்தவர்கள் நேற்று சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர் போலீசார் வழக்குப் பதிந்தனர்.
News August 15, 2025
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தற்போது புதிதாக ‘ஸ்டார்லிங்க்’ என்ற செயலியில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என 100க்கும் மேற்பட்டோர் பல கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் யாரும் இதுபோன்ற ஆன்லைனில் வரும் எந்தவித முதலீடு தொடர்பான செயலிகளை மொபைல்போனில் பதிவிறக்கம் செய்து பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.”