News March 16, 2024

CSK அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி

image

ஐபிஎல் 17ஆவது சீசன் 6 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், CSK அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதிஷா பத்திரனா காயம் காரணமாக ஆரம்பப் போட்டிகளில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையைச் சேர்ந்த 21 வயதான பத்திரனாவுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் 4 முதல் 5 வாரங்கள் வரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த சீசனில் CSK அணியில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Similar News

News October 23, 2025

நான் சச்சினையே முந்தி இருப்பேன்… மைக் ஹஸ்ஸி

image

தனக்கு மட்டும் முன்பே சான்ஸ் கிடச்சிருந்தா, தன் சாதனை வேறு லெவலில் இருந்திருக்கும் என்கிறார் ஆஸி., ex வீரர் மைக் ஹஸ்ஸி. பேட்டி ஒன்றில் அவர், நான் சச்சினை விட 5,000 ரன்கள் அதிகம் எடுத்திருப்பேன். அதிக சதங்கள், ஆஷஸ் & WC வெற்றிகள் குவித்திருப்பேன் என்றார். முதல்தர கிரிக்கெட்டில் 61 சதங்கள், 23,000 ரன்கள் குவித்த ஹஸ்ஸி, ஆஸி., அணியில் இருந்த கடும் போட்டி காரணமாக தாமதமாகவே அணியில் இடம்பிடித்தார்.

News October 23, 2025

டென்ஷன் இல்லாத, நல்ல மூட் வரணுமா… இதை செய்யுங்க

image

நமது நல்ல மனநிலையை பராமரிப்பதில் ‘டோபமைன்’ என்ற ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. மகிழ்ச்சி, பாசிட்டிவ் மூட், மோட்டிவேஷன், நல்ல தூக்கம் போன்ற செயல்பாடுகளுக்கு இது ஊக்கியாக செயல்படுகிறது. இந்த டோபமைன் சரியான அளவில் சுரக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. நீங்களும் உங்க ஐடியாவை கமெண்ட்டில் சொல்லுங்கள்.

News October 23, 2025

பெட்ரோல் பங்கில் ஏமாறாமல் இருக்க இதெல்லாம் கவனியுங்க

image

இந்தியாவில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பல்வேறு மோசடிகள் நடந்துவருவதாக புகார்கள் எழுகின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் பணம் பெருமளவில் சுருட்டப்படுவதாக கூறப்படுகிறது. எனவே, பெட்ரோல் போடும்போது ஏமாறாமல் இருக்க நீங்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டியது அவசியமாகிறது. அவை என்ன என்பதை மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.

error: Content is protected !!