News October 4, 2024
ஈரோட்டில் பட்டாசு கடைக்கு 62 பேர் விண்ணப்பம்

ஈரோடு மாவட்டத்தில் வணிகர்கள் தீபாவளிக்கு தற்காலிக பட்டாசு கடைகளை அமைக்க, அக்.12-க்குள் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்டம் முழுவதும் 62 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்ந விண்ணப்பங்கள் விண்ணப்ப தேதி நிறைவடைந்த பின் மாவட்ட வருவாய் அலுவலர், தீயணைப்பு துறை, போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உரிய பாதுகாப்பு முறைகள் இருந்தால் மட்டுமே தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி அளிக்கப்படும்.
Similar News
News August 13, 2025
திருவிழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர்

அந்தியூர் குருநாதசாமி ஆடித் தேர் திருவிழா இன்று தொடங்கியது. திருவிழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் கோபி சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ செங்கோட்டையன் கலந்து கொண்டார். தொடர்ந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். குதிரை சந்தையும் பார்வையிட்டார். அவருக்கு அஇஅதிமுகவின் நிர்வாகிகள் உடன் கலந்து கொண்டனர்.
News August 13, 2025
ஈரோடு: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா?

ஈரோடு மக்களே, உங்கள் வாக்காளர் அடையாள எண்ணை கொண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உடனே செக் பண்ணுங்க. <
News August 13, 2025
ஈரோடு நவீன நூலகத்தில் நூலகர் தின விழா

ஈரோடு, சம்பத் நகரில் உள்ள நவீன நூலகத்தில் நூலகர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி பங்கேற்றார். தொடர்ந்து, அங்கு உள்ள நூலக தந்தை டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த வாசகர்களுடன் ஆட்சியர் கலந்துறையாடினார்.