News October 4, 2024
ரேஷன் கடைகளில் தீபாவளி தொகுப்பு வழங்க வேண்டும்

அத்தியாவசிய உணவு பொருள்களை தீபாவளி தொகுப்பாக ரேஷனில் வழங்க வேண்டுமென CPM மாநிலக் குழுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னையில் நடந்த அக்கட்சியின் மாநில மாநாட்டில், விலைவாசி உயர்வு காரணமாகத் திண்டாடும் தீபாவளியாக மாறும் சூழல் உள்ளது. இதனால், மக்கள் நலன் கருதி ரேஷன் கடைகளில் சர்க்கரை, கடலை மாவு, பாமாயில், பருப்பு, மைதா போன்ற பொருள்களை தீபாவளி தொகுப்பாக வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News August 13, 2025
பாசமும், மரியாதையும்.. ரஜினிக்கு கமல் வாழ்த்து

‘எங்களைப் போன்று (கமல், ரஜினி) நண்பர்கள் சினிமாவில் இருந்ததில்லை, இனி இருக்கப் போவதுமில்லை’ என்று கமல்ஹாசன் கூறியது இன்றும் இருவரது ரசிகர்களின் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. இந்நிலையில், திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டாரை பாசத்துடனும், மரியாதையுடனும் கொண்டாடுவதாக கமல் பாராட்டியுள்ளார். ‘கூலி’ படமும் மாபெரும் வெற்றி பெற அவர் வாழ்த்தியுள்ளார்.
News August 13, 2025
வெறும் 7 நிமிடங்கள் தான்.. கேன்சருக்கு புதிய வகை ஊசி!

ரோச் நிறுவனத்தின் கேன்சர் சிகிச்சைக்கான Atezolizumab (Tecentriq) என்று மருந்துக்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. இந்த மருந்து உடலின் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டி, கேன்சர் செல்களை அழிக்க உதவுகிறது. முன்பு இந்த மருந்தை உடலில் செலுத்த 60 mins தேவைப்பட்டது. ஆனால், புதிய Atezolizumab-ஐ வெறும் 7 mins-ல் செலுத்தலாம். இதனால் ஹாஸ்பிடல் செலவும் கூட குறையுமாம்.
News August 13, 2025
தமிழகம் வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிலேயே ஜனாதிபதி பங்கேற்க இருந்த நிலையில் கடை நேரத்தில் ரத்தானது குறிப்பிடத்தக்கது.