News October 4, 2024
அரியலூர் மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர், அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாள் 07.10.2024 திங்கள் கிழமை மாலை 4.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில் நடத்தப்படவுள்ளது.
Similar News
News August 22, 2025
அரியலூர்: 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை

தா.பழூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் ரவி (45). கொத்தனாரான இவர், அதே பகுதியில் 3-ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவரை பள்ளியில் இருந்து அவரது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார். தனக்கு நேர்ந்து கொடுமை குறித்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவிக்கவே, அவர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதையடுத்து போலீசார் ரவியை போக்சோவில் கைது செய்தனர்.
News August 21, 2025
அரியலூர் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை குறைக்கும் வகையில், மாவட்டம் முழுவதும் தினம்தோறும் அரியலூர் மாவட்ட காவல் துறையினர் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றைய (ஆக.21) ரோந்துப் பணி செல்லக்கூடிய காவலர்களின் தொடர்பு எண் மாவட்ட காவல்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. எனவே அவசர கால உதவிக்கு தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 21, 2025
அரியலூர்: சொந்த தொழில் தொடங்க வாய்ப்பு

அரியலூர் இளைஞர்களே.. சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு www.msmeonline.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பயனடையலாம். Business ஆரம்பிக்க நினைக்கும் உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.