News October 4, 2024
ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
லட்சதீவு மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த சுழற்சியை நோக்கி வங்கக்கடல் காற்றும் பயணிப்பதால், தமிழகத்தில் மழைக்கு சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, இன்று (அக்.4) தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறை ஆய்வு
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரகலா இன்று ஆற்காடு நகராட்சி தமிழ்நாடு அரசு வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூட குடோனில் சீலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையினை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாதாந்திர ஆய்வு மேற்கொண்டார். உடன் தேர்தல் வட்டாட்சியர் செல்வி. வசந்தி, ஆற்காடு வட்டாட்சியர் பாக்கியலட்சுமி மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இருந்தனர்.
News November 20, 2024
கோவை டபுள் டக்கர் பிருந்தாவன் ரயில்கள் தாமதம்
சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியில் பராமரிப்பு பணிகள் குறித்த நேரத்தில் முடியாத காரணத்தினால் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் அரக்கோணத்திற்கு மூன்று மணி நேரம் கால தாமதமாக வந்தது. அதேபோன்று ஏசி டபுள் டக்கர் மற்றும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரண்டரை மணி நேரம் கால தாமதமாக வந்ததால் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
News November 20, 2024
ராணிப்பேட்டை அருகே நாளை மின்தடை
அரக்கோணம் கோட்டத்தைச் சேர்ந்த இச்சிப்புத்தூர் மற்றும் பள்ளூரில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக நாளை (21-11-2024)மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது. இச்சிப்புத்தூர்,தணிகை,போளூர்,திருமால்பூர்,சயனபுரம், சேந்தமங்கலம்,வாணியம்பேட்டை, தண்டலம், உளியம்பாக்கம், வளர்புரம், ஈசலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என்று கோட்ட செயற்பொறியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.