News October 4, 2024
‘மெய்யழகன்’ படத்தில் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு

‘மெய்யழகன்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரேம் குமார் இயக்கிய இப்படத்தில் கார்த்தி நாயகனாகவும், அரவிந்த் சாமி முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். கடந்த 27ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், படத்தின் நீளம் தொடர்பாக விமர்சனம் எழுந்தது. இதனால் படக்காட்சிகள் குறைக்கப்பட்ட நிலையில், நீக்கப்பட்ட காட்சிகள் தற்போது Xஇல் வெளியாகியுள்ளது.
Similar News
News August 27, 2025
பிஹாரிகள் தாக்கப்படும் போது ஸ்டாலின் எங்கே போனார்? PK

தமிழ்நாட்டில் பிஹார் மைந்தர்கள் தாக்கப்பட்டபோது CM ஸ்டாலின் எங்கே போனார் என பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார். ஸ்டாலினை பிஹாருக்கு அழைத்ததன் மூலம் தேஜஸ்வி யாதவ், காங்கிரஸின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் பிஹாரிகள் குறிவைத்து தாக்கப்படுவதாக பொய் செய்திகள் பரப்பப்பட்டதை நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
News August 27, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

நாளை (ஆக.28) அனைத்து பள்ளிகளிலும் மேலாண்மைக் குழு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் போதைப் பொருள்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுமாறும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இருந்து 100 மீ. சுற்றளவில் புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை இல்லாததை உறுதி செய்யவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி விற்றால் போலீஸில் புகாரளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 27, 2025
அதிமுக கூட்டணியில் விஜய்: RB உதயகுமார் சொல்வதென்ன?

அதிமுக கூட்டணிக்கு தவெக வரவேண்டும் என ஆர்.பி உதயகுமார் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவை வீழ்த்த நினைத்தால் விஜய் அதிமுக கூட்டணிக்கு வரவேண்டுமென்றார். திமுகவை வீழ்த்த கூடிய சக்தி அதிமுகவிற்கு தான் உள்ளது என டெல்லியில் உள்ள பாஜகவிற்கு தெரியும் போது, விஜய்க்கு ஏன் தெரியவில்லை என்றார். முதல்வராக வேண்டும் என்பதற்காக தவெக தொண்டர்களின் உழைப்பு, எதிர்பார்ப்பை விஜய் வீணடித்திட வேண்டாம் என்றார்.