News March 16, 2024
தென்காசி: வட்டார அளவிலான விளையாட்டு போட்டி

பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேரு யுவகேந்திரா மற்றும் வெஸ்டர்ன் கார்ட்ஸ் இந்தியன் அகாடமி இணைந்து நடத்திய வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டி இன்று நடந்தது. விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் சிவபத்மநாதன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் மாஸ்டர் கணேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Similar News
News August 9, 2025
தென்காசி மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரம்

தென்காசி மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் நாள்தோறும் இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி இன்று (ஆக. 8) இரவு தென்காசி, புளியங்குடி சங்கரன்கோவில் ஆகிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அவசர தேவைகளுக்கு அந்தந்த அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
News August 8, 2025
தோரணமலை முருகன் கோயிலில் நாளை கிரிவலம்

கடையம் அருகே அமைந்துள்ள தேரையர், சித்தர், அகத்தியர் வழிபட்ட தோரணமலை முருகன் கோயில் ஆடி மாத பெளர்ணமி கிரிவலம் நாளை காலை 6 மணி முதல் நடைபெறும். இந்த கிரிவலப்பாதையை வலம் வருவதற்கு சுமார் 1.15 மணி நேரம் ஆகும். அதனைத் தொடர்ந்து காலையும், மதியமும் அண்ணதானம் நடைபெறும்.
News August 8, 2025
தென்காசி மருத்துவமனையில் தாய்ப்பால் வார விழா

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம் மற்றும் தமிழ்நாடு மாநில பிரிவு இணைந்து நடத்தும் உலக தாய்ப்பால் வார விழா-2025 ஆகஸ்ட் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய விழாவில் மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில், தாய்ப்பால் வார விழாவின் உறுதிமொழி எடுக்கப்பட்டது.