News March 16, 2024
புதுகை: மாணவர்களுக்கு தீ தடுப்பு ஒத்திகை

கொப்பனாபட்டி அரசு உதவி பெறும் நாராயணன் செட்டியார் அரசுப்பள்ளியில் இன்று வனத்துறை , தீயணைப்பு, மருத்துவதுறை மற்றும் ஸ்டெப் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன், ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி உள்ளிட்டோர் உள்ளனர்.
Similar News
News August 8, 2025
கீரமங்கலத்தில் “அகல் விளக்கு திட்டம்” நாளை தொடக்கம்

கீரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு உடல்,நலம், சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும் செல்போன் பயன்படுத்துவதன் மூலமாகவும் இணையதளம் வாயிலாகவும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர். இது போன்ற பிரச்சனை இருந்து மாணவிகளை மீட்டு அகல் விளக்கு திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி நாளை தொடக்கிவைகிறார்.
News August 8, 2025
புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

புதுக்கோட்டை பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் இங்கே <
News August 8, 2025
தேசிய குடற்புழு நீக்க தினத்தில் மாத்திரைகள் வழங்கல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு, தனியார் கல்லூரிகளில், பயிற்சி பெற்ற ஆசிரியர்கள், சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. இந்த முகாமில் பங்கேற்று பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.