News March 16, 2024
ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டது

ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா தொடங்கிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பை அடுத்து X-ல் பதிவிட்டுள்ள அவர், NDA கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகிவிட்டது எனக் கூறியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவின் நல்ல நிர்வாகம், நிறைவேற்றிய திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் எடுத்துக் கூறி 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
டெக்னாலஜி ஸ்டார்ட்அப்களுக்கு ₹10,000 கோடி: பியூஷ் கோயல்

FFS திட்டத்தின் மொத்த நிதியையும் (₹10,000 கோடி), அடுத்த ஆண்டில் டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஒதுக்க உள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வெளிநாட்டு சார்பு நிலையை குறைத்து, உள்நாட்டு தொழில்நுட்ப தயாரிப்புகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவை கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற பயன்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
தமிழ்நாட்டுக்கு SIR அவசியம்: ஜெயக்குமார்

வாக்காளர் பட்டியலில் உண்மைத்தன்மை வேண்டுமென்றால் TN-க்கு SIR அவசியம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக ஆய்வின்படி, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தொகுதியிலேயே இல்லாத 40,000 பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் பூத் லெவல் ஆபிசர், கட்சிகளின் ஏஜெண்ட் இணைந்து செயல்பட்டால் வெளிப்படைத்தன்மையுடன் வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News October 30, 2025
ராசி பலன்கள் (30.10.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.


