News October 3, 2024

சர்ச்சை பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமின்

image

மாற்றுத் திறனாளிகளை அவமதித்ததாக கைதான மகாவிஷ்ணுவுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. அரசுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. தனது முழு பேச்சை கேட்காமல் பொய் வழக்கு பதியப்பட்டதாக அவரது தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், கைதாகி ஒரு மாதம் கழித்து அவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Similar News

News August 27, 2025

அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

image

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.

News August 27, 2025

விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

image

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.

News August 27, 2025

Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

image

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.

error: Content is protected !!