News October 3, 2024
ஈஷா யோகா மையத்தில் விசாரணைக்கு தடை

ஈஷா யோகா மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கியதை எதிர்த்து ஈஷா சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இதன் விசாரணையில், ராணுவத்தையோ, காவல்துறையையோ இதுபோன்ற ஸ்தாபனத்தில் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், ஈஷா மையத்தில் உள்ள நபர்களிடம் நீதித்துறை அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தலாம் எனவும் அறிவுறுத்தினர்.
Similar News
News August 27, 2025
அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.
News August 27, 2025
Tax Vs Tariff.. என்ன வித்தியாசம்?

USA-ன் வரிவிதிப்பு தொடர்பான செய்திகளில் ‘Tariff’ என்ற வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்போம். இந்நிலையில், இதற்கும் Tax-க்கும் என்ன வித்தியாசம் என்று தற்போது பார்க்கலாம். Tax என்பது அரசுக்கு வரி செலுத்துவோர் மீது விதிக்கப்படும் கட்டணம் ஆகும். இது நேரடி வரி, மறைமுக வரி என இரு வகைப்படும். Tariff என்பது பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் ஆகும்.