News March 16, 2024
அமலாக்கத்துறை 7 நாள்கள் விசாரிக்க அனுமதி

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆரின் மகள் கவிதாவை, மார்ச் 23 வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக நேற்று மாலை ED அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பதால் தனது உடல்நிலையை பரிசீலிக்க வேண்டும் என கவிதா தரப்பினர் வைத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Similar News
News February 2, 2026
டி20 WC பயிற்சி ஆட்டம்: தமிழக வீரர் அதிரடி சதம்!

2026 டி20 உலகக்கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி வீரரான ஜெகதீசன் 49 பந்தில் சதமடித்து (104) அசத்தியுள்ளார். USA-வுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆயுஷ் பதோனி தலைமையிலான இந்திய ஏ அணி 238 ரன்கள் குவித்தது. ஜெகதீசனுக்கு உறுதுணையாக பதோனி (60*), திலக் வர்மா (38) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். கடின இலக்கை நோக்கி ஆடி வரும் USA அணி, 50 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
News February 2, 2026
வங்கி கணக்கில் பணம்.. தமிழக அரசு அறிவிப்பு

பிப்.15 முதல் விவசாயிகள் வங்கிக் கணக்கில் குறுவை நெல் காப்பீட்டு தொகையை காப்பீட்டு நிறுவனங்கள் வரவு வைக்க வேண்டும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், சம்பா நெல் பயிர் அறுவடை பரிசோதனை விவரம் 34 மாவட்டங்களில் நடத்தப்பட வேண்டும் என்றும், வெள்ள பாதிப்புக்கு உள்ளான நாகை, திருவாரூர் மாவட்டங்களில் ஒரு வாரத்தில் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
News February 2, 2026
SC விதிக்கு புறம்பாக தமிழக அரசு குழு அமைப்பு: R.N.ரவி

பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்க TN அரசு அமைத்துள்ள தேடுதல் குழு SC விதிக்கு புறம்பானது என R.N.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். UGC பிரதிநிதியை தேடுதல் குழுவில் கட்டாயம் இணைக்க வேண்டும் என்றும் UGC பிரதிநிதி இல்லாத, தேர்வுக் குழு பரிந்துரைக்கும் எந்தவொரு துணைவேந்தர் நியமனமும் செல்லாது எனவும் கூறிய அவர், UGC பிரதிநிதியை இணைக்கும் வரை தேடுதல் குழுவின் நடவடிக்கையை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தினார்.


