News October 3, 2024
தமிழக கபடி அணிக்கு மோர்ப்பண்ணை இளைஞர் தேர்வு

தமிழ்நாடு அளவிலான 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு கபடி அணி வீரர்களை தேர்வு செய்யும் போட்டி தேனியில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.மங்கலம் மோர்ப்பண்ணை சேர்ந்த மீனவர் காளிதாஸ் மகன் வீர செல்வதாஸ்(19) தமிழக கபடி அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். இவர் இரு ஆண்டுக்கு முன்பு 17 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழக அணியில் இடம்பெற்று, தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. SHARE IT.
Similar News
News August 28, 2025
BREAKING இராம்நாடு கார் விபத்தில் பெண் பலி; 7 பேர் காயம்

ராமநாதபுரம் மாடக்கொட்டான் கிராமம் அருகே இன்று இரவு 9 மணியளவில் இசிஆர் சாலையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. விபத்தில் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த பெண் ரீட்டாமேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குழந்தை உள்பட இருவாகனங்களிலும் வந்த ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News August 27, 2025
இராம்நாடு: மதுவிலக்கு துறையில் வேலை

ராமநாதபுரம் மக்களே; தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு & கலால் துறையில் Specialists, Assistant, Data Entry Operator பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. (அடிப்படை) டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான சம்பளம் ரூ.40,000 முதல் ரூ.1,50,000 வரை. பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மற்றும் விவரங்களை அறிய <
News August 27, 2025
ராம்நாடு: VAO லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க..

ராமநாதபுரம் மக்களே, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது, பயிர்களை ஆய்வு செய்வது VAOவின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04567-230036) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க