News March 16, 2024

சிவகங்கை: போலி செய்தி அனுப்பிய பெண் கைது

image

சிங்கம்புணரி அடுத்த சிங்கமங்கலப்பட்டி பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சி நடப்பதாக வாட்ஸ்அப் மூலம் போலி செய்திகள் வெளியானது. இது குறித்து எஸ்.பி டோங்கரே பிரவீன் உமேஷ் உத்தரவின்படி, எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது. விசாரணையில் வாட்ஸ்அப் மூலம் போலியான செய்தியை பரப்பியது ஒழுகமங்கலத்தை சேர்ந்த ஆனந்தவள்ளி என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 24, 2025

வானில் நடைபெறும் அதிசயத்தைக் காண அழைப்பு

image

தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி செப்.7ஆம் தேதி இரவு வானில் நடைபெறும் அதிசயத்தை காண அழைப்பு விடுத்துள்ளார். இந்திய வானியற்பியல் நிறுவனத்தின் தகவல்களின்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதனால் பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. இது ஒரு இயற்கையான நிகழ்வு என்று அழைப்பு விடுத்துள்ளார்.

News August 24, 2025

சிவகங்கை: அடிப்படை பிரச்னைக்கு உடனே தீர்வு

image

சிவகங்கை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், சாலை சேதம் தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து நீங்கள் வசிக்கும் பதியில் என்ன பிரச்னை என்ன என்பதை போட்டோவுடன் இந்த <>*லிங்கை<<>> கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடி நடவடிக்கை எடுக்கும்.இந்த தகவலை Share பண்ணுங்க.!

News August 24, 2025

சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளுக்கு..

image

சிவகங்கை: குருவாயூரிலிருந்து – சென்னைக்கு ஆகஸ்ட் 27,28,29, 30 ஆகிய தேதிகளில் இரவு 23:15 மணிக்கு புறப்படும் ரயில் எண்:16128, குருவாயூர் – சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் வழக்கமான பாதையான சோழவந்தான், திண்டுக்கல் வழியாக செல்லாது. மாற்று பாதையாக மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களில் நின்று சென்னை எக்மோர் செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தள்ளது.

error: Content is protected !!