News March 16, 2024
ரத்து..! நெல்லை கலெக்டர் அறிவிப்பு

வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெறும். தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் தேதி தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமுலுக்கு வந்தன. இதனால் நெல்லை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் இன்று (மார்ச் 16) தெரிவித்தார்.
Similar News
News October 19, 2025
சப் கலெக்டர் போல் நடித்து மோசடி; பெண் அதிரடி கைது

நெல்லை காரியாகுளம் பகுதியை சேர்ந்த மகிழ்வதனா என்பவரிடம் சத்தியாதேவி (34) என்பவர் தன்னை சப் கலெக்டராக அறிமுகப்படுத்தி, ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டி 10 பவுன் நகையை பெற்று கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். மகிழ்வதனா புகாரில் இன்று மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் சத்தியாதேவியை கைது செய்தது.
News October 19, 2025
நெல்லை: கார் மோதியதில் முதியவர்க்கு நேர்ந்த கொடூரம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது கார் திடீரென மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து திசையன்விளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 19, 2025
தீபாவளி வாழ்த்து தெரிவித்த மாவட்ட ஆட்சியர்

பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது. பாதுகாப்பான முறையில் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழவும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என்று மாவட்ட ஆட்சியர் டாக்டர் சுகுமார் தெரிவித்தார்.