News October 3, 2024
10,000 தன்னார்வலர்களுக்கு மாநகராட்சி அழைப்பு

அக்டோபர் 3ஆவது வாரத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிக மழைப்பொழிவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தில் மாநகராட்சி மேற்கொள்ளும் நிவாரண பணிகளில் மாநகராட்சி உடன் இணைந்து செயல்பட 10,000 தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News September 14, 2025
சென்னை மாணாக்கர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.
News September 14, 2025
BREAKING: சென்னைக்குள் நுழைய 5 ரவுடிகளுக்கு தடை

சென்னை கமிஷனர் அருணின் உத்தரவின்படி, திருவல்லிக்கேணி எடிஜிபி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் 5 ரவுடிகளை அடையாளம் கண்டு சென்னை நகர காவல் சட்டம் பிரிவு 51 A-ன் கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அஜய் ரோகன், நாகேந்திர சேதுபதி, பிரேம்குமார், ராஜா, செல்வபாரதி ஆகியோர் அடுத்த ஓராண்டுக்கு சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் எந்த காரணத்திற்கும் நுழை கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
News September 14, 2025
கொளத்தூர்: தண்ணீர் பிடிக்க சென்ற பெண்ணிடம் அத்துமீறல்

சென்னை, கொளத்தூர், எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 25 வயது பெண் 08.09.2025 அன்று காலை வழக்கம் தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமதாஸ்(61) என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் இராஜமங்கலம் காவல் நிலைய போலிசார் ராமதாஸ்(61) என்பவரை நேற்று (செப்.13) கைது செய்து சிறையில் அடைத்தனர்.