News October 3, 2024

சமந்தா குறித்து சர்ச்சை பேச்சு: வாபஸ் பெற்ற அமைச்சர்

image

நடிகை சமந்தா குறித்து தான் கூறிய <<14252659>>கருத்தை வாபஸ்<<>> பெறுவதாக தெலங்கானா அமைச்சர் <<14254655>>கொண்டா சுரேகா<<>> தெரிவித்தார். தனது கருத்தின் நோக்கம், ஒரு தலைவர் பெண்களை இழிவுபடுத்துவதைக் கேள்வி கேட்பதே தவிர, உணர்வுகளைப் புண்படுத்துவது அல்ல என்று விளக்கமளித்தார். மேலும், தன்னம்பிக்கையுடன் சமந்தா வளர்ந்த விதம் தனக்கு ஒரு உதாரணம் எனவும், தனது கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெறுவதாகவும் கூறியுள்ளார்.

Similar News

News August 17, 2025

கோலியின் சாதனையை தகர்த்த பிரேவிஸ்

image

AUS-க்கு எதிரான T20 தொடரில் 2-1 என்ற கணக்கில் SA தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில்,’பேபி டிவில்லியர்ஸ்’ என வர்ணிக்கப்படும் பிரேவிஸின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொடரில் 180 ரன்கள் அடித்த அவர், மொத்தம் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டார். AUS மண்ணில் அந்த அணிக்கெதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி(12) முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பிரேவிஸ் முந்தியுள்ளார்.

News August 17, 2025

அண்ணாமலைக்கான வாக்குகளும் நீக்கம்: அ.சம்பத்

image

EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.

News August 17, 2025

2047-க்குள் ஒற்றை அடுக்க ஜிஎஸ்டி?

image

ஜி.எஸ்.டியில் பெரும் சீர்த்திருத்தம் நடைபெறவுள்ளதாக தெரிகிறது. இதுவரை 5, 12, 18, 28 என 4 அடுக்காக ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்ட நிலையில், இனி 5, 18 ஆகிய 2 அடுக்குகள் மட்டுமே நடைமுறையில் கொண்டுவர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஒருவேளை இது அமலுக்கு வந்து, இந்தியா வளர்ந்த நாடாக மாறினால் 2047-க்குள் ஒற்றை அடுக்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!