News October 3, 2024

சாரதிய நவராத்திரி இன்று தொடக்கம்

image

புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்படும் சாரதிய நவராத்திரி இன்று தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் நாளில் வீட்டில் கலசம் நிறுவப்படுகிறது. நல்ல நேரத்தில் நிறுவப்படும் இந்த கலசத்திற்கு 9 நாள்களுக்கு வழிபாடு நடத்தப்படும். இதனால், மனமகிழ்ச்சி அடையும் துர்கா தேவி, நமது வேண்டுதலை நிறைவேற்றுவார் என்பது ஐதீகம். கொலு வைக்கும் வழக்கம் உள்ளவர்கள் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி கொலுவை அமைக்க வேண்டும்.

Similar News

News August 17, 2025

ED-யை கண்டு அச்சத்தில் திமுக அமைச்சர்கள்: செல்லூர் ராஜு

image

திமுக அமைச்சர்கள் அத்தனை பேரும் ED சோதனை வந்துவிடுமோ என பதற்றத்திலும், அச்சத்திலும் இருப்பதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பேட்டியளித்த அவர், வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக்கொலையில் நீதி கேட்டு திருமாவளவன் போராடினாரா என கேள்வி எழுப்பிய அவர், சமீபகாலமாக கொள்கையில் சரிவு ஏற்பட்டு திக்கு தெரியாத காட்டில் திருமாவளவன் பயணித்துக் கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.

News August 17, 2025

இட்லி கடை அக். வெந்துவிடும் SORRY வந்துவிடும்: பார்த்திபன்

image

‘இட்லிக்கடை’ படத்தின் டப்பிங்கை முடித்துவிட்டதாக இன்ஸ்டாவில் பார்த்திபன் குறிப்பிட்டுள்ளார். அதில், இரும்பினும் சக்தி கொண்ட இதயத்தோடு, எறும்பினும் சுறுசுறு உழைப்போடு, அகில இந்திய நட்சத்திரமாக தனுஷ் மிளிரினால் ஆச்சர்யமில்லை என தெரிவித்துள்ளார். மேலும், இட்லிக்கடை அக்டோபரில் வெந்துவிடும் SORRY வந்துவிடும் எனவும், மிளிரினால் என்பதை மிருணாள் என படித்தால் நான் பொறுப்பல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News August 17, 2025

இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்

image

இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், இன்று அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!