News March 16, 2024

தஞ்சை அருகே கார் டயர் வெடித்து ஒருவர் பலி

image

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே சறுக்கை பகுதியில், இன்று காரின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியதில், லால்குடி திண்ணியம் பகுதியை சேர்ந்த ஆதவன் என்பவர் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News August 15, 2025

தேசிய கொடியை ஏற்றிய தஞ்சை ஆட்சியர்

image

79வது சுதந்திர தினவிழாவில் தஞ்சை மாவட்டஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தேசியகொடியினை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்களையும், சமாதான புறாக்களையும் பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் நின்றவாறு காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News August 15, 2025

தஞ்சை: சொந்த ஊரில் அரசு வேலை! APPLY NOW

image

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள ’45’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <>க்ளிக்<<>> செய்து, வரும் ஆக.29-க்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.16,000 முதல் ரூ.96,000 வரை வழங்கப்படும். சொந்த ஊரில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News August 14, 2025

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (ஆகஸ்ட். 14) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!