News October 2, 2024
மாற்றத்திறனாளிகளுக்கு தொழிற் பயிற்சி முகாம்

மதுரை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையில் இலவச தொழிற்பயிற்சிகளை வழங்கிட வரும் 09.10.2024ம் தேதி அமெரிக்கன் கல்லூரியில் சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளதாக ஆட்சியர் சங்கீதா அறிவித்துள்ளார். முகாமில் பங்கேற்பு விருப்பம் உள்ளவர்கள் QR கோடு மூலம் ஸ்கேன் செய்தோ, 8778945248 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News August 13, 2025
மதுரை மாநகராட்சி மேயர் கணவர் GH-ல் அட்மிட்

மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி வரி முறைகேடு நடந்த விவகாரத்தில் மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்தை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று சென்னையில் வைத்து கைது செய்தனர். இந்நிலையில், தற்போது பொன்வசந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூடுதல் விசாரணைக்காக அவர் மதுரை அழைத்து வரப்பட்ட நிலையில் அவர் தற்போது இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
News August 13, 2025
மதுரை: ஆக.15ல் மதுக்கடைகள் அடைப்பு

மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நேற்று (ஆக.12) வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வாணிபக் கழகம் மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதனுடன் இணைந்து இயக்கும் மதுக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது அருந்தகங்கள், அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை நிலையம் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News August 13, 2025
மதுரை: இங்கெல்லாம் இன்று மின்தடை

மதுரை மாவட்டத்தில் இன்று (ஆக.13) பெரும்பாலான இடங்களில் மின்தடை ஏற்பட உள்ளது. உசிலம்பட்டி நகர், பூதிப்புரம், கள்ளபட்டி, வலையபட்டி, சீமானூத்து, சிந்துபட்டி, தும்மக்குண்டு, வாகைக்குளம், மாதரை, தொட்டப்பநாயக்கனூர்,இடையபட்டி,உத்தப்பநாயக்கனூர்,திருநகர்,ஹார்விபட்டி, மேக்கிலார்பட்டி, கிரிபட்டி,பொக்கம்பட்டி, நக்கலப்பட்டி, வில்லாணி உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.