News March 16, 2024
கள்ளக்குறிச்சி: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News April 6, 2025
கல்வராயன் மலையில் கைம்பெண்கள் கட்டிய வரி

பெண்கள் மேலாடை அணிய வரி செலுத்தியது பற்றி தெரிந்தவர்களுக்கு கைம்பெண்களுக்கான ‘முண்டச்சி வரி’ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கல்வராயன் மலையை நிர்வகித்த ஜாகீர்தார்கள் வசூலித்த வரிகளில் ஒன்று இது. பெண்ணொருத்தி கணவன் இறந்துவிட்டாலோ (அ) பிரிந்து வந்துவிட்டாலோ கட்டாயம் மறுமணம் செய்து கொள்ளவேண்டும். திருமணம் செய்யவில்லை என்றால் வரி செலுத்த வேண்டும். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க
News April 6, 2025
சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் சோப்தார், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 392 பணியிடங்கள் உள்ளன. ரூ.15,700 – ரூ.58,100 சம்பளம் வழங்கப்படும். 8 முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் <
News April 6, 2025
ரூ.2.50 லட்சம் திருமண உதவித்தொகை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற, தம்பதியில் ஒருவர் SC/ST போன்ற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும்,மற்றொருவர் BC/MBC போன்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவராகவும் இருக்க வேண்டும். https://ambedkarfoundation.nic.in/ என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.