News March 16, 2024
திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ?

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதியிலும் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது திருக்கோவிலூர் தொகுதி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: 1 ஆண்டு மருத்துவ படிப்பு – ஆட்சியர் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி சேர்க்கை வருகிற 14.11.2025 தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அறிவித்துள்ளார். மேலும், முதலில் வருபவர்களுக்கே சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: மழைக்கால அவசர தொடர்பு எண்கள் அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழைக்கால கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொலைபேசி எண்களை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை இலவச எண் 1077, தொலைபேசி எண் 04151-228801, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 04151 – 222493, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் கட்டுப்பாட்டு அறை எண் 04153-252312 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
கள்ளக்குறிச்சி மக்களே நாளை மிஸ் பண்ணிடாதீங்க

கள்ளக்குறிச்சியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை அக்.17 அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 10th, +2, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களும் மற்றும் பட்டதாரிகளும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும், இம்முகாம் குறித்த விவரங்களுக்கு 8807204332/04151-295422 தொடர்பு கொள்ளலாம். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*