News March 16, 2024
அரியலூர்: மகனால் தம்பதியினர் தற்கொலை!

அரியலூர் நகரில் சடைய படையாட்சி தெருவை சேர்ந்தவர் ராமசாமி, வளர்மதி தம்பதியினர். இவர்களின் மகன் இளமதி இவர் குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தாய் ,தந்தையை தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.இதனால் மனம் வெறுத்து போன தம்பதியினர் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை நேற்று குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.இதுகுறித்து அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News January 1, 2026
அரியலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு அரியலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News January 1, 2026
அரியலூர்: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில், 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு <
News January 1, 2026
அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எரக்குடி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் பாக்கியராஜ்-ஆசைலட்சுமி மற்றும் சின்னசாமி-அம்பிகாபதி. இவர்களுக்கிடையே கடந்த ஆண்டு நடந்த தகராறின் போது பாக்கியராஜ்-ஆசைலட்சுமி தம்பதியரை, சின்னசாமி-அம்பிகாபதி தம்பதியர் தாக்கியுள்ளனர். இதுதொடர்பான வழக்கை நேற்று விசாரித்த அரியலூர் கூடுதல் மகிளா நீதிமன்றம், சின்னசாமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அம்பிகாபதிக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது.


