News October 2, 2024
“குவாட்” ஆசியாவின் நேட்டோவா? இந்தியா பதில்

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, ஐரோப்பாவில் உள்ள நேட்டோ போன்றது குவாட் அமைப்பு என்றும், அது ஆசியாவின் நேட்டோ, சீனாவிற்கு எதிரானது என்றும் கூறியிருந்தார். ஆனால் இது ஜப்பானின் கருத்து. இந்தியாவுடையது அல்ல. இந்தியா பல சீரமைப்புக் கொள்கையைப் பின்பற்றுகிறது. ஜப்பானை போன்று பல நாடுகளுடன் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 27, 2025
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மல்லி தேநீர்!

கொத்தமல்லி விதை & தழைகளில் உள்ள பைட்டோஸ்டெரால் ரசாயனம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மாரடைப்பு அபாயத்தை குறைப்பதாக சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர். கொத்தமல்லி விதை & தழை, சுக்கு, மிளகு, மஞ்சள், நட்சத்திரப் பூ, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால், மணமிக்க சுவையான மல்லி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம். SHARE IT.
News August 27, 2025
OTP பெறாமல் ஆன்லைன் சேவைகளே கிடையாது: HC

மத்திய, மாநில & தனியார் நிறுவனங்கள் பல்வேறு சேவைகளுக்காக OTP பெறுவது தனியுரிமை விதிகளுக்கு முரணானது என கூறி, OTP-க்கு தடை விதிக்க மதுரை HC-ல் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த ஐகோர்ட், இன்றைய காலகட்டத்தில் OTP பெறாமல் எந்த ஒரு ஆன்லைன் சேவையும் நடைபெறாது என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தது. முன்னதாக, ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற DMK முன்னெடுப்பில் OTP பெறுவதற்கு HC தடை விதித்தது.
News August 27, 2025
மீண்டும் அதிமுகவில் இணைய முடியாது.. EPS அதிரடி முடிவு

பாஜக கூட்டணியிலிருந்து விலகிய <<17528723>>OPS<<>>, நிபந்தனையின்றி அதிமுகவில் இணைய தயார் கூறியதற்கு, ‘இணைக்க மாட்டோம்’ என்று கடந்த வாரம் EPS திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்நிலையில், நேற்று ஒன்றிணைய வேண்டும் என EPS-க்கு மீண்டும் அழைப்பு விடுத்தார். இதுகுறித்து மூத்த தலைவர்கள் EPS-யிடம் ஆலோசிக்கையில், அவரை நீக்கியது நீக்கியதுதான், மீண்டும் இணைப்பு குறித்து பேச வேண்டாம் என EPS முற்றுப்புள்ளி வைத்துவிட்டாராம்.