News October 2, 2024
விருதுநகர்: ஊருக்கே பெருமை தேடி தந்த காளையின் இறுதி ஊர்வலம்

திருப்பத்தூர் அருகேயுள்ள வைரவன்பட்டி கருப்பர் கோயில் காளை கடந்த 28 ஆண்டுகளாக சிராவயல், அரளிப்பாறை உள்ளிட்ட மஞ்சு விரட்டுக்களில் பங்கேற்று கிராமத்திற்கு பெருமை தேடித்தந்தது. நேற்று முன்தினம்(செப்.30) இரவு உடல்நலக்குறைவால் இறந்தது. நேற்று(அக்.01) கிராமத்தினர் காளைக்கு அஞ்சலி செலுத்தினர். காளையின் உடலை ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலுக்கு அருகில் அடக்கம் செய்தனர்.
Similar News
News August 19, 2025
சிவகங்கை: இலவச கேஸ் சிலிண்டர் பெற விண்ணப்பிங்க!

சிவகங்கை மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்<
News August 19, 2025
வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
News August 18, 2025
சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.