News March 16, 2024
இன்று முதல் அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிகள் (2)

4. பேரணி, ஊர்வலம், கூட்டத்தை நடத்த காவல்துறையிடம் அனுமதி பெற வேண்டும். 5. 50,000 ரூபாய்க்கு மேல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது. 6.அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் ஓட்டுக்குப் பணம், பரிசுப்பொருள் அளிக்கக் கூடாது. 7. வழிபாட்டு இடங்கள், பதற்றமான இடங்கள் & தடைசெய்யப்பட்ட பகுதிகளில் கூட்டம் நடத்தக் கூடாது. 8. மதம், மொழி, இனம் சார்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது.
Similar News
News January 28, 2026
நாடாளுமன்றத்தில் ஒலித்த ஒற்றை தமிழ் குரல்!

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஜனாதிபதி முர்மு ஆற்றிய உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பேசினார் CP ராதாகிருஷ்ணன். முன்னதாக தனது உரையை தமிழில் தொடங்கிய அவர், தாயாய், தந்தையாய், குருவாய், தெய்வமாய் நாம் அனுதினமும் வழிபடுகின்ற புனித பாரத அன்னையின் பொற்பாதங்களை வணங்குவதாக கூறினார். மேலும், ஜனநாயக நாட்டில் பல முரணான கருத்துகள் இருந்தாலும், சில விஷயங்களில் இந்தியர்கள் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றார்.
News January 28, 2026
வரலாறு காணாத உயர்வு.. தங்கம் விலை புதிய உச்சம்

தங்கம் விலை வரலாறு காணாத வகையில் இன்று ஒரே நாளில் ₹5,200 அதிகரித்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 சவரன் காலையில் ₹2,960 உயர்ந்த நிலையில், பிற்பகலில் மேலும், ₹2,240 அதிகரித்து நடுத்தர மக்கள், நகைப் பிரியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது, ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹15,610-க்கும், 1 சவரன் ₹1,24,880-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
News January 28, 2026
அஜித் பவார் கடிகாரம்: அங்கீகாரமும்.. அடையாளமும்

மகாராஷ்டிரா DCM அஜித் பவார், கொடூரமான விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சிதறிக்கிடந்த விமான பாகங்களுக்கு இடையே, அவரது உடலை கையில் இருந்த கைக்கடிகாரம் தான் அடையாளம் காட்டியது. இதில் நெகிழ வைக்கும் சோகம் என்னவென்றால், கடிகாரம்தான் அவரது NCP கட்சியின் சின்னம். MLA-வாக, அமைச்சராக, DCM-ஆக அவரை உயர்த்தி அழகு பார்த்த அதே கடிகாரம்தான், இன்று அவரது உடலை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது.


