News March 16, 2024
விளவங்கோடு இடைத் தேர்தல் தேதி அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி பதவி விலகியதால் இத்தேர்தல் நடத்தப்படுகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் விளவங்கோடு இடைத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறவுள்ளது.
Similar News
News April 6, 2025
அவதார் – 3 பட வெளியீடு கன்பார்ம்

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார் பட வரிசையில் ’அவதார் – Fire and Ash’ மூன்றாம் பாகம் டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிதான் என்றாலும் இரண்டாம் பாகம் வெளியாவதில் பல முறை தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, மூன்றாம் பாகம் திட்டமிட்டபடி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
News April 6, 2025
CSK என்ன செய்ய வேண்டும்?

CSK அணியின் தொடர் தோல்வி அதன் ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம், தன் பக்கம் இருக்கும் பிரச்னைகளை CSK ஆய்வு செய்ய வேண்டிய நேரமிது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். இளம் வீரர்களை அணியில் சேர்க்காதது, அதிக எண்ணிக்கையிலான ஸ்பின்னர்களை கொண்டிருப்பது, ஹிட்டர்கள் யாரும் இல்லாதது என வீக்னஸ் பட்டியல் நீள்கிறது. CSK சரி செய்ய வேண்டிய தவறுகள் என்னவென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
News April 6, 2025
வடமாநிலத்தவர்கள் குளிக்க மாட்டார்கள்: துரைமுருகன்

தூத்துக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வடமாநிலத்தவர்கள் யாரும் குளிக்கக் கூட மாட்டார்கள். ஆனால், தமிழர்கள் ஒரு நாளைக்கு 2 வேளை குளிப்பார்கள்’ என அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நின்று தமிழர்கள் நாகரிகமற்றவர்கள் என்று கூறும் அவர்களுக்கு நாகரிகம் என்றால் என்னவென்று தெரியுமா என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.