News March 16, 2024
சலுகைகள் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஆட்சியர் அலுவலகங்களில் (திங்கள்கிழமை தோறும்) நடக்கும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது. தனிநபர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள், தேர்தல் முடிந்து மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்படும். அத்துடன் விவசாயிகள், மீனவர் கோரிக்கை தினக் கூட்டங்கள் தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் வரை நடைபெறாது.
Similar News
News August 17, 2025
சின்ன வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா?

*சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது. *இன்சுலின் சுரப்பை சீராக்கி, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. *சின்ன வெங்காயம் நார்ச்சத்தின் மூலமாகும்; இது மலச்சிக்கலை தடுத்து, குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. *சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி வந்தால் முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சி அதிகரிக்கும். SHARE IT.
News August 17, 2025
WhatsApp-ல் வந்த அசத்தல் அப்டேட்!

WhatsApp-ல் இனி Call-களை முன்கூட்டியே Schedule செய்யும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் அல்லது Group Calls என அனைத்து வகை Chat-களுக்கும் முன்கூட்டியே நேரத்தை முடிவு செய்து, Schedule செய்யலாம். மேலும், இந்த Call தொடங்குவதற்கு முன், அனைவருக்கும் ஒரு Reminder மெசேஜும் கிடைக்கிறது. WhatsApp-ல் Calls ஆப்ஷனில், Call பண்ண விரும்புவோரின் Contact-ஐ அழுத்தி பிடித்தால், Schedule option வரும்.
News August 17, 2025
2-வது மனைவியை பிரிந்தாரா மாதம்பட்டி ரங்கராஜ்?

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை நீண்டு கொண்டே செல்கிறது. முதல் மனைவியுடன் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்ற அடுத்த நாளே, கர்ப்பமாக இருக்கும் 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா குழந்தையின் பெயரை அறிவித்தார். இந்நிலையில், தனது ஆடை வடிவமைப்பாளராக இருந்த ஜாய் கிரிசில்டாவை நீக்கியுள்ளார் ரங்கராஜ். இதனால், அவரை ரங்கராஜ் கழற்றி விட்டுவிட்டாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.