News October 2, 2024
ரத்த தானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவனையில் இரத்த தான முகாம் நடைபெற்றது. மருத்துவ மாணவர்கள் பங்கேற்று இரத்த தானம் செய்தனர். அவர்களுக்கு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் பாராட்டு சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்வில், சார் ஆட்சியர் நாராயண சர்மா, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோதிகுமார், துணை முதல்வர் அனிதா மருத்துவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 20, 2025
செங்கல்பட்டு: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

செங்கல்பட்டு மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -044-27428840, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் செய்யுங்கள். <<17461769>>தொடர்ச்சி<<>>
News August 20, 2025
இலவச சட்ட ஆலோசனை மையத்தின் சேவைகள்

சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, கடன் பிரச்சனை,குழந்தைகளுக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவைகளுக்கு ஆலோசனை பெறலாம். சில வழக்குகளுக்கு (சிவில் / கிரிமினல் / குடும்பம் சார்ந்த) இலவசமாக வழக்கறிஞர் பெறலாம் .நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு இரு தரப்பினரும் சமரசம் செய்ய தயாராக இருந்தால், லோக் அடாலட் மூலம் தீர்வு காணலாம். வக்கீல் பீஸ் இல்லாமலே வாதாட முடியும். ஷேர் பண்ணுங்க
News August 20, 2025
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெண் மயங்கி விழுந்து பலி

மாமல்லபுரத்தில் நேற்று(ஆகஸ்ட் 19) இரவு நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஜீவா என்ற பெண் சினிமா பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மகிழ்ச்சியான சூழலில் நடந்த இச்சம்பவம், திருமண வீட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.