News March 16, 2024
நாகர்கோவில் மாநகராட்சியில் வளர்ச்சி பணிகள்

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 33வது வார்டுக்குட்பட்ட தொழிலாளர் நல அலுவலக வளாகத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் தொல்லவிளை பாரதியார் தெருவில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைத்தல் ஆகிய பணிகள் இன்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Similar News
News September 22, 2025
குமரி: பேரூராட்சி தலைவர் பதவி ரத்துக்கு தடை

தேரூர் பேரூராட்சி மன்ற தலைவர் அமுதா ராணி பதவியை மதுரை உயர் நீதிமன்றம் ரத்து செய்து ஆணை வெளியிட்டது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர், வழக்கறிஞருமான தளவாய் சுந்தரம் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து மதுரை நீதிமன்ற உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதாக தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தெரிவித்தார்.
News September 22, 2025
குமரி: சிப்காட் உணவு வளாகத்தில் வாடகைக்கு இடங்கள்

குமரி மாவட்டம், கங்கை கொண்டான் சிப்காட் வளாகத்தில் மெகா உணவு பூங்கா அமைக்கபட்டுள்ளது. இந்த உணவு பூங்காவில் தற்போது 13 ஏக்கர் அளவிலான இடங்கள் தொழில் முனைவோர்களுக்கு 94 ஆண்டுகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளது. தொழில் தொடங்க விருப்பமுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்த தொழில் முனைவோர்கள் வடசேரி வேளாண்மை தொழில் விற்பனை துணை இயக்குனரை அணுக ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.
News September 22, 2025
குமரி: மழை நெருங்குது! – மக்களுக்கு அறிவுரை

குமரியில் மழைக்கால மின்விபத்துகளை தடுக்க பாதுகாப்பு அறிவுரை:
1.அறுந்த கம்பிகள், கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்கவும்.
2.இடி, மின்னலின்போது வெட்டவெளி, மரத்தடி, செல்போன் பயன்படுத்த வேண்டாம்.
3.சுவர்களில் தண்ணீர் கசிவு இருந்தால் மின்சாதனங்களை தவிர்க்கவும்.
அவசர உதவிக்கு 9445859032, 9445859033, 9445859034 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.