News October 1, 2024
சேலத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் உள் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை (அக்.2) தமிழகத்தின் கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News August 26, 2025
சேலம் ஆவினில் வேலை.. இந்த தேதி முக்கியம்!

சேலம் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. மாதம் ரூ.43,000 என்ற ஊதிய அடிப்படையில் சூரமங்கலம் வாழ்வாதார மையத்தின் மதி திட்டம் மூலம் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. இதற்காக வரும் ஆக.29 காலை 10 மணியளவில் சேலம் பால் பண்ணை வளாகத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் நேர்காணல் நடைபெறவுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு இங்கு <
News August 26, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்பு!

சேலம் மாவட்டத்தில் விவசாயிகள் மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.
பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு குமாரசாமிப்பட்டி வேளாண்மை பொறியியல் துறையின் சேலம் செயற்பொறியாளர் அலுவலகத்தையோ (அ) மேட்டூர், ஆத்தூர், சங்ககிரி (அ) தங்கள் பகுதியில் அருகில் உள்ள வேளாண்மை பொறியாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
News August 26, 2025
அரசு கண்காட்சி 17 நாட்கள் 30,000 பார்வையாளர்கள்!

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மக்கள் செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் அரசு பொருட்காட்சி கடந்த 4ம் தேதி துவங்கியது. இன்று வரை 17 நாட்கள் நடைபெற்ற இந்த அரசு பொருட்காட்சியை 25,191 பெரியவர்களும், 4,108 சிறியவர்களும், கண்டு ரசித்துள்ளனர். 26 அரசுத்துறைகள் ஆறு அரசு சார்பு நிறுவனங்கள் என 32 அரங்குகளும், பொழுதுபோக்குகளும் கொண்ட கண்காட்சி வருகின்ற 21.9.2025 வரை நடைபெறுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.