News March 16, 2024
சேலம் அருகே சாலை மறியல்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் ஒரு மாதமாக காவிரி குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த மக்கள் இன்று இளம்பிள்ளை – சின்னப்பம்பட்டி பகுதியான பாப்பாபட்டி பகுதியில் சாலை மறியல் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போலீசார் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
Similar News
News April 13, 2025
மாநில அளவில் 2ஆம் இடம் பெற்ற சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த NMMS தேர்வை 44 தேர்வு மையங்களில் சுமார் 10,230 மாணவர்,மாணவிகள் கலந்து கொண்டு எழுதினர். இதனிடையே தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் சேலம் மாவட்டத்தில் 479 மாணவர்,மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வழங்கப்படும்.
News April 13, 2025
சேலத்தில் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்க ஏற்பாடு

சேலம் குரங்குச்சாவடியில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற ஐயப்ப ஆசிரமத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (ஏப்.14) அதிகாலை 04.00 மணிக்கு நடைத் திறக்கப்பட்டு மஹா கணபதி ஹோமத்துடன் கோயில் முழுவதும் காய்கனிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் ஐயப்பன் பாதத்தில் வைத்து பூஜைச் செய்யப்பட்ட ஒரு ரூபாய் நாணயம் மற்றும் லட்டு சுமார் 25,000 பக்தர்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு.
News April 13, 2025
சேலம் இன்றைய முக்கிய நிகழ்வுகள்

சேலம் ஏப்ரல் 13 இன்றைய முக்கிய நிகழ்வுகள் காலை 9 மணி குருத்தோலை ஞாயிறு வைபவத்தை ஒட்டி ஊசி மாதா கோயிலில் சிறப்பு பவனி
காலை 10 மணி வக்பு சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக் கோரி நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் (கோட்டை மைதானம்)
மாலை 6 மணி வகுப்பு வரை கட்டத்தை திரும்ப பெறக்கோரி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் பொதுக்கூட்டம் (கோட்டை மைதானம்)
மாலை 7 மணி ஹாரிஸ் ஜெயராஜ் இன்னிசைக் கச்சேரி (மூன்றோடு)