News March 16, 2024
96.88 கோடி பேரின் கையில் இந்திய ஜனநாயகம்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். கடந்த 2019 தேர்தலை விட வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம். ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி, பெண் வாக்காளர்கள் 47.1 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 48,044 பேர். மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் 2.63 கோடி.
Similar News
News October 20, 2025
இந்தியாவுக்கு 200% வரி எச்சரிக்கை விடுத்தேன்: டிரம்ப்

இந்தியா – பாக்., மோதலை நான் நிறுத்தியதாக மீண்டும் டிரம்ப் கூறியுள்ளார். ஆபரேஷன் சிந்தூரின் போது 7 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக கூறிய அவர், இரு நாடுகளும் அணு ஆயுதப் போருக்கும் தயாரானதாக தெரிவித்தார். ஆனால், மோதல் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கும் 200% வரி விதிப்பேன் என்று எச்சரித்ததால், இருதரப்பும் மோதலை நிறுத்திக் கொண்டன என்றும் கூறினார். இதனை இந்தியா இதுவரை திட்டவட்டமாக மறுக்கிறது.
News October 20, 2025
BREAKING: விலை மளமளவென குறைந்தது

கார் வாங்க பிளான் பண்ணுறீங்களா? இதுதான் சரியான நேரம். தீபாவளியையொட்டி முன்னணி கம்பெனிகள் விலையை குறைத்துள்ளன. டாடா தனது டிகோர் செடான் காருக்கு ₹30,000 வரை தள்ளுபடி கொடுக்கிறது. ஹூண்டாய் ஆரா ₹43,000 வரையும், ஹோண்டா அமேஸ் புதிய மாடலுக்கு ₹68,000, பழைய மாடலுக்கு ₹98,000 வரையும் சலுகை வழங்கப்படுகிறது. மேலும், வோக்ஸ்வேகன் விர்டஸ் ₹1.50 லட்சம், ஸ்கோடா ஸ்லாவியாவுக்கு ₹2.25 லட்சம் குறைகிறது. SHARE
News October 20, 2025
உலகின் ஆபத்தான வேலைகள் இவை தான்..

‘அதுவா சரியாயிட்டா பரவால்ல, இல்லைனா கடல்ல இறங்கி கப்பல தள்ளனும்’ என்ற வசனம் சிரிப்பை கொடுத்திருக்கலாம். ஆனால், தன் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென தெரிந்தும் சில ஆபத்தான வேலைகளை செய்கிறோம். இதற்கு பொருளாதார நிலை உள்பட பல காரணங்கள் இருந்தாலும், உயிரின் மதிப்பு விலைமதிப்பற்றதே. உலகின் டாப் 10 ஆபத்தான பணிகளை மேலே swipe செய்து பாருங்கள். ஆபத்தான வேலை என நீங்கள் நினைப்பதை கமெண்ட்டில் சொல்லுங்கள்.