News March 16, 2024
கடலூரில் அரிசி விலை கிடு., கிடு உயர்வு!

கடலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதேபோல் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய அரிசியின் விலையும் உயர்ந்துள்ளது. ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வரும் வரத்து குறைந்ததுதான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடலூரில் கடந்த மாதம் ரூ.52-க்கு விற்ற ஒரு கிலோ பொன்னி புழுங்கல் தற்போது 60-க்கு விற்கப்படுகிறது.
Similar News
News August 8, 2025
கடலூர் மாவட்டம்: எந்தப் பதவியில் யார் ?

▶️ மாவட்ட ஆட்சியர் – சிபி ஆதித்யா செந்தில் குமார்
▶️ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – எஸ்.ஜெயக்குமார்
▶️ மாவட்ட வருவாய் அலுவலர் – ம. ராஜசேகரன்
▶️ கடலூர் மாநகராட்சி ஆணையர் – எஸ்.அனு
▶️ திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை – ரா. சரண்யா
▶️ இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 7) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News August 7, 2025
குறிஞ்சிப்பாடி: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் நாளை (ஆகஸ்ட் 8) ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை ஆக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.